உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 30
யானற்
றியல்வது தேரி
னெதுவது
தானற்
றவமென்றா
னுந்தீபற
தானாம் ரமணேச
னுந்தீபற. [30]
யான் அற்று
இயல்வது
தேரின் எது
அது
தான் அற்ற
தவம் என்றான்
உந்தீ பற
தானாம்
ரமணேசன் உந்தீ
பற.
விளக்கம்
'நான்' என்பது இல்லாதபோது, எது உள்ளதோ, அதுவே சிறந்த தவம் - ரமணர்
விளக்க உரை
'நான்' என்பது இல்லாதபோது, எது உள்ளதோ, அதுவே சிறந்த தவம் - ரமணர்
தவம் என்பது என்ன? உடல் நிலை மறந்து ஆன்மிகத்தில் மெய் மறத்தல் தவமாகும்.
ரமணர் கூற்றுப் படி 'ஆத்மா விசாரம்'
(Self Enquiry) மூலம் 'தன நிலை இருத்தல்'
(Self Abidance) தவமாகும். 'நான்' என்பது எங்கிருந்து துளிர்க்கிறது என்பதை கண்டுபிடித்து அந்த மூலத்துடன் ஒன்றுவதே தவம்.
ஒருவன் தன இயற்கை நிலையில் (Natural State) உறுதியாக இருத்தலே
(Abiding Firmly) மிக இயல்பான (Spontaneous) தவம். இதுவே மிகக் கடினமானது. இங்கே இயல்பானது எனக் கூறக் காரணம் 'மனம்' தன் உதிக்கும் இடம் 'இதயத்தில்' எப்பொழுதும் இருத்தலே.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது
(1) 'நான்' என்ற உடல் சார்ந்த எண்ணம் மறைவது.
(2) மனம் தன் இயல்பு நிலையான இதயத்தில் ஆழ்ந்து இருப்பது
(3 ) நான்தான் செய்கிறேன் என்ற
(Sense of Doership) எண்ணம் இறந்து போவது.
(4) ஒருவன் தன் 'இருப்பு- உணர்வு- ஆனந்தம்'
(Existence-Consciousness-Bliss) எனப்படும் சத்-சித்-ஆனந்த்
(Sat-Chit-Anand) என்ற இறைநிலையில் ஒன்றி இருப்பது. இதுவே அறிவு. இதுவே இறைவனுக்கு செய்யும் மகத்தான பணி. ஆத்ம விசாரமே
( Self - Enquiry) இதற்கான எளிய வழி என பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி கூறுகிறார்.