உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

 

பாடல் - 29

 

 

பந்தவீ டற்ற பரசுக முற்றவா
றிந்த நிலைநிற்ற லுந்தீபற
விறைபணி நிற்றலா முந்தீபற. [29]

பந்த வீடு அற்ற பரசுகம் உற்றவாறு
இந்த நிலை நிற்றல் உந்தீ பற
இறைபணி நிற்றலாம் உந்தீ பற.


விளக்கம்


பந்தம் ( Bondage), வீடு (Liberation) இவை அற்ற பேரானந்தம் (Supreme Bliss) அடைந்தபின் , இந்த நிலையிலேயே நிற்பது இறைவனுக்கு ஆற்றும் பணி. ஆம். அந்நிலையிலேயே இருப்பதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி


விளக்க உரை

பந்தம் ( Bondage), வீடு (Liberation) இவை அற்ற பேரானந்தம் (Supreme Bliss) அடைந்தபின் , இந்த நிலையிலேயே நிற்பது இறைவனுக்கு ஆற்றும் பணி. ஆம். அந்நிலையிலேயே இருப்பதுவே. 

ஒருவன் தன்னை (identity) இதயத்துடன் ஒன்றாமல் இருக்கும் அறிவின்மையே பந்தம் ( Bondage). வீடு (liberation) என்பது இதன் எதிர்மறை. இவை இரண்டும் ஒன்றின் இரட்டை முகம். ஒன்றில்லாமல் மற்றொன்று இராது. ஆகவே பந்தம் இல்லையென்றால் விடுதலை தேவையில்லை. 

அறிவு (Knowledge), அறிவின்மை (Ignorance) யாவும், யாருக்கு இந்த பந்தம் ( Bondage) என வினவும்போது, அந்த நான் என்பது மறைந்துபோகும். அந்த சுய விழிப்புணர்வு (Self-Awareness) அறிவு (Knowledge), அறிவின்மையை (Ignorance) களையும்.

ஒருவனுடைய தெய்வீகத் தன்மையை (Divinity) ஆத்ம விசாரம் (Self-Enquiry) மூலமாக எளிதில் அடையமுடியும். இது மனித முயற்சியுடன், இறை அருளால் நிகழும். 

நாம் செய்யவேண்டியது ஒன்றே. தொடர்ந்து 'நான் யார்' என (Who am I?) வினவுவது. இது மனம் என்பது மாயை என்று புரியவைத்து நம்மை இதயத்துடன் ஒருங்கிணைக்கும். 

'நான் யார்' என மூழ்க தொடர்ந்து முயற்சித்தாலே, ஒரு கட்டத்துக்கு மேல் நமது உள்- தெய்விகத்தன்மை (Inner Divine) தொடர்ந்து வழிகாட்டும். 

 

இந்த சத்-சித்- ஆனந்த் (Sat-Chit-Anand) நிலையை இந்த மனித உடலிலேயே அனுபவிக்கலாம். இது எல்லோருக்கும் உள்ள இயற்கை நிலையே. இந்த பேரானந்த நிலை மனம் எனும் திரையால் மூடப்பட்டுள்ளது. மனம் இதயத்திலிருந்து விலகியிருப்பதால் நேர்ந்த நிலையே இது. 

இந்த பேரானந்த நிலையின் சுவையை பயிற்சியின் போதே எளிதில் உணரலாம்.
இது விட்டு விட்டு எழும் இடைப்பட்ட ஆனந்த உணர்வாகவும் இருக்கலாம். இது தொடந்து பயணம் செய்ய ஏதுவாகும்.  அப்படி இல்லையென்றால் ஒருவனின் புலன் உணர்வு  (Physical Attachments) மிக அதிகமாக உள்ளது என கொள்ளலாம். 

 

மனம் இதுவரை அடைந்த ஆனந்தம புல், வைக்கோலுக்கு இணை என உணர்ந்து படிப்படியாக அவற்றை இழக்க தயங்காது. 

 

உடம்பில் இருக்கும்போதே அடையும் 'ஜீவன் முக்தி',  விதியின் பிடியில் நாம் இருக்கும்போதே அடைய முடியுமா என்றால் 'முடியும்' என்கிறார் ரமணர். ஒருவன்  ஆத்ம விசாரததின் மூலம் இதயத்தை அடையும்போது நான்தான் செய்கிறேன் என்ற (Sense of Doership) அழிந்துபோகும். 

பார்ப்பவர்களுக்கு இந்நிலை அடைந்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து துன்பப்படுவது போல தோன்றினாலும் அவர்களின் விவேகம் துளியும் மாறாது. 

மகிழ்ச்சியின் முழுமையும் ஏராளமும் ( Fullness and Abundance) அவர்களின் நீரோட்டமாக எப்பொழுதும் வாழ்க்கை முழுவதும் நிரம்பி இருக்கும்.

 

 

 

HOME