உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

 

பாடல் - 28

 

 

தனாதியல் யாதெனத் தான்றெரி கிற்பின்
னனாதி யனந்தசத் துந்தீபற
வகண்ட சிதானந்த முந்தீபற. [28]

தன் ஆதி இயல் யாது எனத் தான் தெரிகில் பின்
அனாதி அனந்த சத் உந்தீ பற
அகண்ட சிதானந்தம் உந்தீ பற.


விளக்கம்


தனது இயல்பு யாது என தான் அறியும்போது ஆரம்பமும், முடிவும் அற்ற ' இருப்பு- உணர்வு- ஆனந்தம் ' (Existence-Consciousness-Bliss) எனப்படும் சத்-சித்-ஆனந்த் (Sat-Chit-Anand) என்ற இறைநிலையை அடையலாம். 


விளக்க உரை

தனது இயல்பு யாது என தான் அறியும்போது ஆரம்பமும், முடிவும் அற்ற 'இருப்பு- உணர்வு- ஆனந்தம்' (Existence-Consciousness-Bliss) எனப்படும் சத்-சித்-ஆனந்த் (Sat-Chit-Anand) என்ற இறைநிலையை அடையலாம். 

 

இந்த சத்-சித்- ஆனந்த் (Sat-Chit-Anand) நிலையினை அடைவது எவ்வாறு? இதோ எளிய வழி. நமக்கு எந்த எண்ணங்கள் வந்தாலும், மிக ஜாக்கிரதையுடனும், விழிப்புடனும் இது யாருக்கு வருகிறது என்று என்று கவனித்தால் 'எனக்கு' என்பது விளங்கும். அதனால் 'நான் யார்' ('Who am I') என்று விசாரித்தால் மனம் அதில் உள்நோக்கும். இதனால் எண்ணங்கள் தணியும். மீண்டும் மீண்டும் 'ஆத்ம விசாரத்தில்' 'நான் யார்' (Atma Vicharam - Who Am I ?) என்பதை பயிற்சி செய்யும்போது ஆதாரத்தில் (Source) இருக்க வலிமை கிடைக்கும். இதுவே 'நான் - உணர்வு' ( I -Consciousness ) என்பதை கண்டுணரும் வழி. 

HOME