உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 27
அறிவறி
யாமையு மற்ற
வறிவே
யறிவாகு
முண்மையீ
துந்தீபற
வறிவதற்
கொன்றிலை
யுந்தீபற. [27]
அறிவு
அறியாமையும்
அற்ற அறிவே
அறிவாகும்
உண்மை ஈது
உந்தீ பற
அறிவதற்கு
ஒன்று இலை
உந்தீபற.
விளக்கம்
'அறிவு' (Knowledge), 'அறியாமை'
(Ignorance) இரண்டும்
அற்ற அறிவே
உண்மையான
அறிவு. தன்னைத்தவிர அறிய வேறு ஒன்றும் இல்லை. இதுவே உண்மை.
விளக்க உரை
'அறிவு' (Knowledge), 'அறியாமை' (Ignorance) இரண்டும் அற்ற அறிவே உண்மையான அறிவு. ஏனென்றால் 'தன்னை உணர்தல்' (Self Experience) எனப்படுவதில் 'நம்மை' தவிர அறிய பிறிதொன்றில்லை (Nothing Else). எல்லா வேறுபாடுகளும் உதாரணமாக 'நான் அறிவேன்' , (I Know) 'நான் அறியேன்' ( I don't know) இவை அனைத்தும் அந்நிலையில் மறைந்து போகும். இதுவே உண்மையான அறிவு.