உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

 பாடல் 26 - 30 எளிய விளக்கம்

 

26 . தானாயிருத்தலே தன்னை அறிதல் ஏனென்றால் 'நான்' என்பது இரண்டல்ல. இதுவே

        உண்மையில  உறைதல் ( Abidance in Reality or Self-Abidance) எனப்படும் 'தன்மைய       

       நிஷ்டை' (Tanmaya Nishtai) 

27 .  'அறிவு' (Knowledge), 'அறியாமை' (Ignorance) இரண்டும் அற்ற அறிவே உண்மையான அறிவு. 

       தன்னைத்தவிர அறிய வேறு ஒன்றும் இல்லை. இதுவே உண்மை. 

 28 . 
தனது இயல்பு யாது என தான் அறியும்போது ஆரம்பமும், முடிவும் அற்ற ' இருப்பு- 

        உணர்வு- ஆனந்தம் ' (Existence-Consciousness-Bliss) எனப்படும் சத்-சித்-ஆனந்த் 

        (Sat-Chit-Anand) என்ற இறைநிலையை அடையலாம். 


29 .  
பந்தம் ( Bondage), வீடு (Liberation) இவை அற்ற பேரானந்தம் (Supreme Bliss) அடைந்தபின் , இந்த 

       நிலையிலேயே நிற்பது இறைவனுக்கு ஆற்றும் பணி.

 

30 .  'நான்' என்பது இல்லாதபோது, எது உள்ளதோ, அதுவே சிறந்த தவம்

HOME