உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

 

பாடல் - 26

 

 

தானா யிருத்தலே தன்னை யறிதலாந்
தானிரண் டற்றதா லுந்தீபற
தன்மய நிட்டையீ துந்தீபற. [26]

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்
தான் இரண்டு அற்றதால் உந்தீ பற
தன்மய நிட்டை யீது உந்தீ பற.


விளக்கம்


தானாயிருத்தலே தன்னை அறிதல் ஏனென்றால் 'நான்' என்பது இரண்டல்ல. இதுவே உண்மையில் (Reality) உறைதல் ( Abidance) எனப்படும் 'தன்மைய நிஷ்டை' (Tanmaya Nishtai) 


விளக்க உரை

தன்னை உணர்தல் என்பது இரு பொருள் இல்லை என்பதை உணர்தல். உணரும் பொருளும், உணரப்படும் பொருளும் ஒன்றே. காண்பவன், காட்சிப் பொருள் இவை இரண்டும் ஒன்றே. 'நான்' ஒன்றே. அதுவே முழுமை. 'இது', 'அது' என்பது மனதின் விளையாட்டு. அப்படி என்றால் மனதுக்கு பின்னால் உள்ளதை அறிவது எவ்வாறு? 'நான்' எனப்படும் 'இதயத்தில்' அதாவது 'உணர்வில் ' (Consciousness) உறைவதே 'ஆத்ம நிஷ்டை' அல்லது 'தன்மைய நிஷ்டை' (Atma Nishtai or Tanmaya Nishtai) 

HOME