உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் - 25

தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வதா லுந்தீபற. [25]

தன்னை உபாதி விட்டு ஓர்வது தான்
ஈசன் தன்னை உணர்வதாம் உந்தீ பற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற.

 

விளக்கம்

தன்னுடைய உபாதிகளை ( Limitations) விட்டு தன்னை உணர்வதே 'இறைவனை' அறியும் வழி. பிறகு இறைவன் நம்மில் ஒளிர்வார்.

 

விளக்க உரை

 


நம்முடைய உடல், பெயர், மனம் இவற்றை விட்டு விடுவதே மூலாதாரத்துடன் (Source) ஒன்றும் வழி. இந்த உடல், மனம், பெயர் போன்றவற்றை விட்டு 'நான்' (Self) எனப்படும் உருவமற்ற தன்னிருப்பை (Self Abidance) உணர்வதே இறைவனை உணரும் வழி.

தன்னை உணர்வது எவ்வாறு இறைவனை உணர்வது என கேள்வி எழலாம். ஜீவனும், இறைவனும் ஒரே உண்மை (Reality)

இது ஆறு கடலுடன் கலப்பது போன்றும் , உப்பு பொம்மை கடலில் கரைவதற்கு ஒப்பாகும். ஜீவன், இறைவனில் ஒன்றியபிறகு 'நான்' (Self), இறைவன் (God) வெவ்வேறு அன்று.
 


HOME