உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் - 24

   இருக்கு மியற்கையா லீசசீ வர்க
ளொருபொரு ளேயாவ ருந்தீபற
வுபாதி யுணர்வே றுந்தீபற. [24]

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள்
ஒரு பொருளே ஆவர் உந்தீ பற
உபாதி உணர்வே வேறு உந்தீ பற.

 

விளக்கம்

இயற்கையில் இறைவனும் (GOD) ஜீவர்களும்( SOULS ) ஒரு பொருளே. உபாதி உணர்வு மட்டுமே வேறு வேறு. ( உபாதி என்றால் நிபந்தனையுள்ள வரையறைக்கு உட்பட்ட, எல்லைகளுக்கு உட்பட்ட)

 

விளக்க உரை

இருப்பு, உணர்வு ( Existence, Consciousness) இவை இரண்டுமே இறைவனுக்கும் (GOD) ஜீவர்களுக்கும் ( SOULS) பொதுவான 'நான்' ( I am I ) எனும் இயற்கைத் தன்மை.  உபாதி உணர்வு மட்டுமே வேறு வேறு. ( உபாதி என்றால் நிபந்தனையுள்ள வரையறைக்கு உட்பட்ட)


ஜீவர்கள் ஞானம் வரம்புக்கு உட்பட்டதாக நினைக்கிறார்கள் இறைவன் அனைத்தும் உணர்ந்தவன். ஜீவர்கள் ஆற்றல் குறைவானதாக நினைக்கிறார்கள். இ
றைவன் ஆற்றல் எல்லை அற்றது. இதுவே உபாதி எனப்படுவது. இதுவும் ஜீவர்களின் எண்ணப்பாடே அன்றி இறைவனின் எண்ணப்பாடு அல்ல.

 

ஜீவர்களும், இறைவனும் வெவ்வேறு எனும் நிலைப்பாடு, இரண்டுக்குமான மூலத் தன்மை ஒன்றே என்பதை உணரும் வரைமட்டுமே நீடிக்கும். இந்த எண்ணப்பாடை எவ்வாறு களைவது பின்வரும் பாடல்களில் காணலாம்.


HOME