உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 23
உள்ள துணர வுணர்வுவே றின்மையி
னுள்ள துணர்வாகு முந்தீபற
வுணர்வேநா மாயுள முந்தீபற. [23]
உள்ளது உணர உணர்வு வேறின்மையின்
உள்ளது உணர்வாகும் உந்தீ பற
உணர்வே நாமாய் உளம் உந்தீ பற.
விளக்கம்
உணர்வு (Consciousness) உள்ளது என்பதை உணர வேறு ஒரு உணர்வு இல்லை. இந்த உணர்வே
(Consciousness) நாம்.
விளக்க உரை
உண்மை எனப்படும் 'சத்' யாதெனில், உணர்வு எனப்படும் 'சித்' என்பதே. இந்த உணர்வே (Consciousness) நாம்..
இருப்பு (Existence, Sat), உணர்வு
(Consciousness, Chit), பேரானந்தம்
(Bliss, Anand) இவையே உண்மை (Reality).
இதுவே முழுமை மற்றும் அளவற்றது.
மனம், நான், இவை அனைத்துமே 'சித்' அல்லது 'உணர்வு.' இந்த உணர்வின் இருப்பிடம் நம் இதயமே. (மார்பின் வலது பக்கம்) இருப்புக்கு ஆதாரமாக மற்றொரு உணர்வு இருக்குமேயானால் அது முடிவற்ற எல்லையாக இருக்கும் (Ad Infinitum).