உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 22
உடல்பொறி
யுள்ள
முயிரிரு
ளெல்லாஞ்
சடமசத் தானதா
லுந்தீபற
சத்தான
நானல்ல
வுந்தீபற. [22]
உடல் பொறி
உள்ளம் உயிர்
இருள் எல்லாம்
சடம் அசத்து
ஆனதால் உந்தீ
பற
சத்தான நான்
அல்ல உந்தீ
பற.
விளக்கம்
உடல், மனம் , உள்ளம், உயிர், இருள் இவை அனைத்தும் ஜடம். இவை அசத் எனப்படும் உண்மை அற்றவை. இவை அனைத்துமே 'நான்' ஆகமாட்டா . 'நான்' மட்டுமே 'சத்' எனப்படும் 'உண்மை'
விளக்க உரை
அன்னமய கோசம்
(Annamaya Kosa) எனப்படும் உடல், மனோமய கோசம்
(Manomaya Kosa) எனப்படும் பொறிகளை இயக்கும் மனம், விஞ்ஜான
மய கோசம் (Vijnanamaya
Kosa) எனப்படும்
புத்தி, பிராணமய கோசம்
(Pranamaya Kosa) எனப்படும் உயிர், ஆனந்தமய கோசம்
(Anandamaya Kosa) எனப்படும் உறக்கத்தில் அனுபவிக்கும் இருள், இந்த ஐந்தும் ஜடம். இவை உண்மை ஆகா மாட்டா. ' நான்' எனப்படும் 'உணர்வு'
(Consciousness) மட்டுமே சுய இருப்பும்
(Self Existing) சுய ஒளியும், (Self shining) கொண்டது.
ரமணர் இப்பாடலின் மூலம் 'உணர்வு'
(Consciousness) ஒன்று மட்டுமே எப்பொழுதும் இருப்பு கொண்டது
(Always Existing) என்கிறார். உணர்வு மட்டுமே அழிவற்றதும் உண்மையும் என்பது இதிலிருந்து விளங்கும்.