உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் 21 - 25 எளிய விளக்கம்
21 . சுஷுப்தி எனப்படும் ஆழ்ந்த தூக்கத்தில் ( Deep sleep state ) நான் என்பது இல்லை.
அனால் நம் இருப்பு இடைவிடாமல் எப்போதும் உள்ளது. ஆகவே எப்போதும்
உள்ளது எதுவோ அதுவே உண்மையான 'நான்' ஆகும்.
22 . உடல், மனம் , உள்ளம், உயிர், இருள் இவை அனைத்தும் ஜடம். இவை அசத்
எனப்படும் உண்மை அற்றவை. இவை அனைத்துமே 'நான்' ஆகமாட்டா . 'நான்'
மட்டுமே 'சத்'
எனப்படும் 'உண்மை'
23 . உண்மை எனப்படும் 'சத்' யாதெனில், உணர்வு எனப்படும் 'சித்' என்பதே.
இந்த
உணர்வே (Consciousness) நாம்..
24 . இயற்கையில் இறைவனும் (GOD) ஜீவர்களும்( SOULS ) ஒரு பொருளே. உபாதி
உணர்வு
மட்டுமே வேறு வேறு. ( உபாதி - Limitations)
25 . தன்னுடைய உபாதிகளை ( Limitations) விட்டு தன்னை உணர்வதே 'இறைவனை'
அறியும் வழி. இது ஆறு கடலுடன் கலப்பது போன்றும், உப்பு பொம்மை கடலில்
கரைவதற்கு ஒப்பாகும். ஜீவன், இறைவனில் ஒன்றியபிறகு 'நான்' (Self), இறைவன்
(God) வெவ்வேறு அன்று. பிறகு இறைவன் நம்மில் ஒளிர்வார்.