உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 21
நானென்னுஞ்
சொற்பொரு ளாமது நாளுமே
நானற்ற தூக்கத்து முந்தீபற
நமதின்மை நீக்கத்தா லுந்தீபற. [21]
நான் என்னும் சொற்பொருளாம் அது நாளுமே
நான் அற்றது ஊக்கத்தும் உந்தீ பற
நமதின்மை நீக்கத்தால் உந்தீ பற.
விளக்கம்
சுஷுப்தி எனப்படும் ஆழ்ந்த தூக்கத்தில் ( Deep sleep state ) நான் என்பது இல்லை.
அனால் நம் இருப்பு இடைவிடாமல் எப்போதும் உள்ளது. ஆகவே எப்போதும் உள்ளது எதுவோ அதுவே
உண்மையான 'நான்' ஆகும்.
விளக்க உரை
நமது இருப்புக்கு எப்போதுமே ஆதாரமாக எது உள்ளதோ அதுவே உண்மையான 'நான்'. 'நான்' என்ற
உணர்வை விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும் நாம் அறிகிறோம். , ஆனால் சுஷுப்தி
எனப்படும் ஆழ்ந்த தூக்கத்தில் ( Deep sleep ) 'நான்' காணமல் போனாலும் நம்
இருப்பு என்னவோ தொடர்ந்து உள்ளது. . எப்போதும் உள்ள இருப்பு எதுவோ அதுவே உண்மையான 'நான்'
ஆகும்.
ரமணர் அந்த உணமையான இருப்பு நமது மார்புக்கு வலது பக்கத்தில் உள்ளது என்றும், அதுவே
உண்மையான 'இதயம்' என்றும் கூறுகிறார். மார்புக்கு இடது பக்கமாக இருக்கும் 'இதயம்'
நமது உடல் உறுப்பு மட்டுமே ஆகும்.