உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

 

பாடல் - 20

 

 

நானொன்று தானத்து நானானென் றொன்றது
தானாகத் தோன்றுமே யுந்தீபற
தானது பூன்றமா முந்தீபற. [20]

நான் ஒன்று தான் அத்து நான் நான் என்ற ஒன்று அது
தானாகத் தோன்றுமே உந்தீ பற
தான் அது பூன்றமாம் உந்தீ பற.


விளக்கம்


'நான்' என்ற எண்ணம் அழியும் போது, மற்றொரு 'நான்' 'இதயமாக' உருவெடுக்கும். . இதுவே இருப்பு (Existence ) மற்றும் 'முழுமை' (Fullness ) ஆகும். .

விளக்க உரை

 

'நான்' என்ற எண்ணம் (Ego self) அழியும் போது, மற்றொரு 'நான்' 'இதயமாக' உருவெடுக்கும். . இதுவே இருப்பு (Existence) மற்றும் 'முழுமை'  (Fullness) ஆகும். 

எனவே ' நான்' எனும் அகங்காரம் அழியும்போது வெறுமை (Void) மிஞ்சும் என அஞ்சவேண்டாம். 

இந்த நான் என்ற இதயமே நிச்சயமான உண்மை (Absolute Reality). இதயத்தில் நிலையபெற்றவருக்கு எண்ணங்கள் வந்து போனாலும் அவரது உள்ள எழுச்சி 

(Inner Emotion) ஒரு சீராக இருக்கும். 


இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, 

இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே 

எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

HOME