உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் - 19

நானென் றெழுமிட மேதென நாடவுண்
ணான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]

நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.


விளக்கம்


' நான் என்று எழும் இடம் எது?' என ஆராய்ந்தால்,

'நான்' என்பது அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்'
 

விளக்க உரை


ஆத்ம விசாரத்தில் ( Self Enquiry )  ஈடுபட்டு ' நான் யார்' ( Who am I ) என்ற கேள்விக்கு விடை காணும் போதுதான் ஒருவன் தன்னை பற்றிய சுய அறிவு ( Self Knowledge ) பெறுகிறான். 

ரமணர் மனதின் அடிப்பட்டை ' நான்' என்ற எண்ணமே என்கிறார். ' நான் யார் ' என்பதை அடிப்படையை ஆராயும் போது ' அகங்காரம் ' (Ego ) அதனுடன் ஒன்றுவதால், அகங்காரம் அழிந்து போகும். மேலும் 'நான்' என்பதை தொடர்ந்து ஆராய்வதால் ' நான்' என்பதும் அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம். 

நான் ( I ) என்ற எண்ணம் ' உணர்வை ' ( Consciousness ) அடைவது நாய் தன் எஜமானை அதன் மோப்ப சக்தியின் மூலம் சென்றடைவது போன்றது. மனமும் ( Mind ) தகனத்தை கிளரும் குச்சி தகனத்திலேயே எரிந்து போவது போல அழிந்து போகும். 


HOME