உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 18
எண்ணங்க ளேமனம் யாவினு
நானெனு
மெண்ணமே மூலமா முந்தீபற
யானா மனமென லுந்தீபற. [18]
எண்ணங்களே மனம் யாவினு[ம்] நா[ன்] எனும்
எண்ணமே மூலமாம் உந்தீ பற
யானா மனம் எனல் உந்தீபற.
விளக்கம்
மனம் என்பது எண்ணங்களே. எல்லா எண்ணங்களுக்கும் மூல காரணம்
'நான இவ்வுடல்' எனக் கருதுவதே.
விளக்க உரை
மனம் என்பது பலவகை எண்ணங்களின் தொகுப்புக்கான பொதுவான பெயர். இதில் 'நான் - உடல் ' என்ற எண்ணமே மற்ற எல்லா எண்ணங்களின் மூல காரணம்.
நான் என்ற எண்ணம் இரு வகைப்படும். 1 . நான் என்ற உடல் சார்ந்த எண்ணம்
(Body Consciousness). 2 நான் என்ற துய்மையான இருப்பு, மற்றும் உணர்வு
(Existence , Consciousness). இதில் இரண்டாவது கூறப்பட்ட நான் என்பதே தெரிந்துகொள்ள விழையும் தன்னிலை
( Subject ). மற்றவை யாவும் பொருட்கள்
(Object). நான் என்ற எண்ணம் உதித்த பின்பே மற்றவை உதிக்கும். . ஆகவே தன்னிலை
(Subject) அடங்கும் பட்சத்தில், எல்லா எண்ணங்களும் தானாகவே அடங்கும்.
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது 'நான்(I)' என்பதே 'உடல்(Body)' என்பதற்கும் 'உணர்வு( consciousness )' என்பதற்கும் பிணைப்பு. இந்த 'நான்' என்பதை தொடர்ந்து பற்றிக்கொண்டு அதன் மூலமான 'உணர்வு '
(Consciousness) என்பதை அடைய முடியும். இந்த உணர்வு
(consciousness) மட்டுமே முழுமையானது மட்டுமல்லாமல் அளவற்றதும் ஆகும்
(Consciousness is only Complete and Limitless)