உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

 

பாடல 16 - 20 எளிய விளக்கம்

 

16 . மனமானது வெளி விஷயங்களை விடுத்து மூலாதாரமான உணர்வுநிலையில் ( Consciousness ) 

        எப்போதும் இருப்பு கொள்வதே உண்மையான அறிவு.



17 . 
மனத்தின் உருவத்தை மறதியின்றி ஆராய்ந்தால் , மனம் என்ற ஒன்று இல்லை என்பது 

        விளங்கும்.



 18 . 
மனம் என்பது பலவகை எண்ணங்களின் தொகுப்புக்கான பொதுவான பெயர். இதில் 'நான் - 

         உடல் ' என்ற எண்ணமே மற்ற எல்லா எண்ணங்களின் மூல காரணம்.

 


19 .  
' நான் என்று எழும் இடம் எது?' என ஆராய்ந்தால்,

        'நான்' என்பது அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்'


 

20 .  'நான்' என்ற எண்ணம் அழியும் போது, மற்றொரு 'நான்' 'இதயமாக' உருவெடுக்கும்.  இதுவே 

         இருப்பு (Existence ) மற்றும் 'முழுமை' (Fullness ) ஆகும். 

 

 

HOME