உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 16
வெளிவிட யங்களை விட்டு மனந்தன்
னொளியுரு வோர்தலே யுந்தீபற
வுண்மை யுணர்ச்சியா முந்தீபற. [16]
வெளி விடயங்களை விட்டு மனம் தன்
ஒளி உரு ஓர்தலே உந்தீ பற
உண்மை உணர்ச்சியாம் உந்தீ பற.
விளக்கம்
மனம் வெளி விஷயங்களை விடுத்து, தன் ஒளியிலேயே இருப்பதே உண்மையான அறிவு.
விளக்க உரை
மனம் வெளி
விஷயங்களை விடுத்து, தன் ஒளியிலேயே இருப்பதே உண்மையான அறிவு.
நமது மனம் தூங்கும்போது வெளி விஷயங்களை இழக்கிறது. அனால் இது உண்மையான அறிவு அன்று.
மனமானது வெளி விஷயங்களை விடுத்து மூலாதாரமான உணர்வுநிலையில் ( Consciousness )
எப்போதும் இருப்பு கொள்வதே உண்மையான அறிவு. ஏனென்றால் நமது இருப்பும் (
Existence ), உணர்வும் ( Consciousness ) ஒன்றே.
இங்கே கவனிக்கவேண்டியது மனம் அதன் ஆதாரமான உணர்வுடன் ஒன்றுவது முக்கியம் .(Mind
merging with its source Consciousness).
அப்போது
உண்மை
என்பது யாது என்பது விளங்கும்.