உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 15
மனவுரு மாயமெய்ம் மன்னுமா யோகி
தனக்கோர் செயலிலை யுந்தீபற
தன்னியல் சார்ந்தன னுந்தீபற. [15]
மன உரு மாயம் மெய்ம்மன்னுமா[ம்] யோகி
தனக்கோர் செயல் இலை உந்தீபற
தன் இயல் சார்ந்தனன் உந்தீ பற.
விளக்கம்
மனமானது மாய்ந்து, உண்மையில் நிலைகொண்ட
யோகிக்கு இனி எந்த செயபாடும் தேவை இல்லை
யோகி தன் நிலை
( Self Abidance ) அடைந்தார்.
விளக்க உரை
மனம் அழியப்பெற்ற யோகிக்கு, நான், நான் செய்கிறேன், நான் இவ்வுடம்பு போன்றவை, ஏதும் இல்லை. மனம் அழியப்பெற்று, தான் யார் ( Who am I ) என்று யோகி தன் நிலைபெற்ற பின் ( Self Abiding ) , செயல்கள் (Actions) ஏதும் இல்லை. நான் செய்கிறேன் என்ற எண்ணம் ( Sense of Doership) நீங்கப்பெற்ற யோகி இறைவனின் கருவி.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது யோகியின் மனம் உள்-ஒளி பெற்றுவிட்ட பின் ( the mind knowing its own form of light ), செயல் எண்ணம் ( Sense of Doership) நீங்கபெற்ற யோகியின் செயல்கள் யோகியை கட்டுப்படுத்தாது யோகியின் செயல்கள் சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டது. யோகி இறைவனின் கருவியாக செயல்படுவார் ( Channel for God).