உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 14
ஒடுக்க வளியை யொடுங்கு முளத்தை
விடுக்கவே யோர்வழி யுந்தீபற
வீயு மதனுரு வுந்தீபற. [14]
ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை
விடுக்கவே ஓர்வழி உந்தீ பற
வீயும் அதன் உரு உந்தீ பற.
விளக்கம்
மூச்சினால் ஒடுக்கப்பட்ட மனத்தை
ஒரே எண்ணத்தில் நிலைக்கொண்டால்
மனம் அழிந்து போகும்.
விளக்க உரை
பிராணாயமம் போன்ற மூச்சு பய்ற்சியினால் மனதை ஒடுக்கி எண்ணங்கள் அற்று மனதை நிலைகொள்ள செய்ய வேண்டும். இதுவே முழுமையான இலக்கு அன்று. இந்நிலையில் வெகு நேரம் நிலை கொண்டால் ஆழ்ந்த தூக்க நிலைக்கு ஆளாக நேரிடும். இந்த எண்ணங்கள் அற்ற அனுபவத்தை உய்ப்பது யார் ( நான் யார் -
Who am I ) என்று 'விழிப்புணர்வு நிலைகொண்டு ' ஒரே இலக்கில் நிலை கொள்ளவேண்டும்.. இதனால் மனம் முழுமையாக அழிந்து போகும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. 1 ) ப்ராணாயமம் போன்ற மூச்சு பயிற்சியினால்
மனோலயம் (Stillness of Mind) பெறவேண்டும் 2 ) இந்த சந்தர்பத்தை தக்கவாறு ஒருமுகப் படுத்தி 'நான் யார்' என்ற விழிப்புணர்வுநிலையில்
( Consciousness ) நிலைகொண்டு மேற்கூறிய ஆன்மிக அனுபவத்தை பெறவேண்டும்.