உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல - 11 - 15 எளிய விளக்கம்

11 . மனமும் மூச்சும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. பிரணாயமம் எனும்

       எளிய  மூச்சுப் பயிற்சி மூலம் மனதை எளிதில் ஒருமுகப்படுத்த முடியும். ஆனால்  

       பயிற்சி  முடிந்தவுடன் மனம் மீண்டும் அலைபாயத் தொடங்கும.

 12 .  உயிர் சக்தியின் அடிப்படை மூச்சு எனப்படும் பிராணன். மனமும் பிராணனை 

         அடிப்படையாகக் கொண்டதே. மனம் அறிய உதவுகிறது. பிராணன் செய்ய
          உதவுகிறது.
 இரண்டும் உதயம் ஆகும் இடம் ஒன்றே.

 13 .  மனதை இரண்டு வழிகளில் ஒடுக்கலாம். லயம் (மனோலயம்) என்பது தற்காலிகமாக

         மனதை ஒடுக்குதல். இதனால் மனம் மீண்டும் எழும். மனத்தை உரு மாய்த்தல்

         (மனோநாசம்)  நிரந்தரமாக மனதை மாய்க்கும்.


14 .   பிராணாயமம் போன்ற மூச்சு பய்ற்சியினால் மனதை ஒடுக்கி எண்ணங்கள் அற்று 

         மனதை நிலைகொள்ள செய்ய வேண்டும்.    அப்பொழுது  நான் யார் -   என்று

         'விழிப்புணர்வு கொள்ளவேண்டும். இதனால் மனம் முழுமையாக அழிந்து போகும். 


15 .  மனம் அழியப்பெற்று, 'தான் யார்' என்று யோகி தன் நிலைபெற்ற பின், செயல்கள்

        ஏதும் இல்லை. யோகி தன் நிலை அடைந்தார்.

HOME