உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் -5

திடமிது எண்ணுரு யாவு மிறையுரு வாமென
வெண்ணி வழிபட லுந்தீபற
வீசனற் பூசனை யுந்தீபற. [5]


எண் உரு யாவும் இறை உரு ஆ[கு]ம் என
எண்ணி வழிபடல் உந்தீபற
ஈசன் நல் பூசனை உந்தீபற.


விளக்கம்


நாம் எண்ணுகிற உருவங்களை இறை உருவாயக் கொண்டு,

இறைவனாய் வழிபடல், சிறந்த இறை வழிபாடு. 

விளக்க உரை

இறைவனை எவ்வுருவிலும் வழிபடலாம். எல்லாமே இறையின் வடிவங்களாகும். இதுவே சிறந்த இறை வழிபாடு. [ இதே பாடல் இறைவனை எட்டு வகை உருவங்களிலும் வழிபடலாம் என பொருளாகிறது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், சூரியன், சந்திரன் மற்றும் எல்லா உயிர்களும் ஆக எண் வகை உருவங்கள் எனவும் பொருள் ஆகி வருகிறது.]

எனவே எல்லாவற்றிலும் இறைவனை காண்பது உத்தமம்.

HOME