உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் -3
கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங்
கருத்தைத் திருத்தியஃ துந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற. [3]
கருத்தனுக்கு ஆக்கு[ம்] நிட்காமிய கன்மம்
கருத்தைத் திருத்தி அஃது உந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற.
விளக்கம்
எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காமல்
கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் செயல்
மனதை தூய்மையாக்கும் (நிஷ்காம்ய கர்மம்)
அது மோட்சத்துக்கு வழி வகுக்கும்.
விளக்க உரை
எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் செயல் மனதை தூய்மையாக்கும் (நிஷ்காம்ய கர்மம்) அது மோட்சத்துக்கு வழி வகுக்கும்
'நால்வகைப் பலன்கள் ' ஒரு செயலால் விளையலாம். எதிர்பார்த்த பலனோ, கூடவோ, குறைந்தோ, வேறு பலனோ அவை. பயன் என்ன என்று கவலைப்படாமல், செய்யவேண்டிய செய்கையினை கடமையாக செய்வதே நிஷ்காம்ய கர்மம் எனப்படும். பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காம்ய கருமமே,நமது மனதை திருத்தி, கதிவழி[முக்தி] காட்டும் என்பதே உண்மை.
நிஷ்காம்ய கர்மா என்பது களங்கமற்ற, தன்னலமற்ற, பலனை எதிர்பாராமல் , மிக சிரத்தையுடன், கடவுளுக்கே அர்ப்பணமாக நாம் செய்யும் செயல். இதனால் மனது சுத்தி அடைவதுடன் நம்முடைய ஒவ்வொரு செயலும் கடவுளை நோக்கி எடுத்து வைக்கும் அடியாக அமையும். உண்மையை உற்று நோக்கினால் நிஷ்காம்ய கர்மா செயல் தான் மிக மிக எளியது.
"Nishkamya Karma", is the unselfish performance of the duties of Life. It is the
---FIRST STEP--- towards the attainment of the final beatitude of life.
இப்பாடலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. 1 . பலன் எதிர்பாராமை. 2 . கடவுளுக்கு அர்ப்பணம். பலன் எதிர்பாராமல் செய்யும் செயல் அசிரத்தையுடன், ஏனோதானோ என இருக்கலாம். அகவே ரமணர் செயல் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதாக சிரத்தையுடன் இருக்கவேண்டும் என்கிறார்.