உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் -1
கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற. [1]
கன்மம் பயன்
தரல் கர்த்தனது ஆணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் சடமதால் உந்தீபற.
விளக்கம்
கர்மா அதன் செய்கையினால் மட்டும் விளைவிக்காது.
கடவுளது அனுமதிப்படியே கர்மா அமைகிறது
அதாவது, கர்ம பலன் செயலை பொருத்து அமையாமல்
செயலின் நேரம், தன்மை ஆகியவற்றின் அடிப்படையில்
கடவுளினால்
நிர்ணயிக்கபடுகிறது
விளக்க உரை
ஜீவர்களால் செயப்படும் கர்மங்கள் அதனுடைய பலனைத்
திருப்பித்தரக் கூடியதானது கடவுளின் ஆணைப்படியே நிகழும். செய்கின்ற கர்மமே பலனைத்
தருகின்ற கடவுளாக இருக்கமுடியுமோ? ஏன் எனில் கர்மமானனது தானே இயங்கக்கூடிய
சக்திவுடயது அல்ல. அது ஜடமானது.
கர்மங்களை தன்னிச்சைப்படி செய்யும்
சுதந்திரத்தை ஜீவர்களுக்கு கொடுத்த இறைவன், ஜீவர்களின் இச்சைப்படி கர்ம பலனைப்
பெறுவதற்குத் தடைவிதித்தான். அவன் செய்த கருமத்திற்கான பலன் தருவதை இறைவன் விதித்த
ஆணைப்படி நடக்கும்படி அதாவது தனது ஆணைக்குள் இருக்கும்படிக்கு செய்தான் . இல்லையேல்
நிலைமை மோசமாகிவிடும் . இது இறைவனின் எலையில்லா கருணை ஆகும்.
ஜீவன் செய்கின்ற எந்த ஒரு செயலும் பலன் தராது
போகாது. அவன் செய்த கருமத்திற்கு ஏற்றவாறு பலன் கொடுக்கும். இது இறைவனின் நியதி.
ஆனால் ஒருவன் செய்யும் செயலுக்கான பலன் செய்பவனின் இச்சைப்படி நடக்காது. இறைவன்
இச்சைப்படிதான் நடக்கும் .ஆனால் ஜீவன் தான் செய்யும் செயலுக்கு தான் விரும்பும்
பலனை அடைய எண்ணுகிறான்.
Theme: Tabs and Folders