ஆன்மிகம்  - ஒரு விளக்கம்
Gan, Chennai




1. ஆன்மிகம் (Spirituality)  என்றால் என்ன?

நாம் யார், நமக்கும், இறைவனுக்கும், பிரபஞ்சத்திற்கும், மற்றும் உள்ள ஏனைய ஜீவராசிகளுக்கும்  பின்னால் உள்ள தொடர்பு என்ன? இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள உண்மை தத்துவம் யாது என்பதை உணரும் வழி முறையே ஆன்மிகமாகும்.

2. ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும்  உள்ள  வேறுபாடு என்ன?

உண்மையான ஆன்மிகம்  எல்லா சமய, மத  கோட்பாடுகளை கடந்து நிற்பது. ஆன்மிக வழி முறைகள் மத சார்பற்ற முறைகளை கொண்டது.  மதங்கள் பல்வேறு கோட்பாடுகளை முன்னிறுத்தி அவற்றை பின்பற்றுவதின் மூலம் வாழ்க்கை முறையை செம்மைபடுத்தவும், இறைவனை உணர வழி முறைகளை போதிப்பதும் ஆகும். ஆன்மிகமும், மதமும் சென்றடையும் இடம் ஒன்றாக இருப்பினும் பின்பற்றும்   வழி முறைகள் வேறு வேறு. அத்வைத வேதாந்தம், உபநிஷத்துகள் போதிப்பதும், ரமண மகரிஷியின் பல  போதனைகளும், ஸ்ரீ அரவிந்தர், அன்னை இவர்களின் போதனைகளும் மத கோட்பாடுகளை கடந்து நிற்கும் ஆன்மிக தத்துவங்களாகும்.

3. உண்மை என்பது என்ன?

எது எப்பொழுதும்  சாஸ்வதமானதோ, எது என்றும் அழியாததோ, எது மாறுதலுக்கு என்றும் உட்படாததோ, அதுவே உண்மை என கருதப்படுகிறது.  உண்மைக்கு அப்பாற்பட்ட அனைத்துமே மாயை எனும் கோட்பாட்டிற்குள் வருகிறது. அப்படி பார்க்கும் போது நம் ஐம்புலன்களுக்கு பிரத்யட்சமாக புலப்படும் அனைத்துமே மாறக்கூடிய வஸ்த்துவே. காலம, நேரம், இடம், பொருள் அனைத்துமே என்றுமே மாறக்கூடிய ஒன்று. இவை அனைத்துமே அழியக்கூடிய வஸ்துவே.

உதாரணத்திற்கு ஒரு ரோஜா மலரை நாம் உண்மையான இருப்பாகிய அணுக்களாகவும், மூலக்கூறாகவும் காண்பதற்கு பதிலாக நம் மூளை ஏன் அழகான மலராக வடிவமைத்து தருகிறது? ரோஜாவின் வடிவம் நம் மூளையினாலேயே உருவாகிறதே அன்றி உண்மையான ரோஜா அவ்வடிவில் இல்லை. சூட்சமம் ஆகவே நம் மூளையில் மட்டுமே உள்ளது. வெளியில் இல்லை. இத்தத்துவம் போட்டோ கேமராவுக்கும் பொருந்தும்.
.
ஒரு மரம் விழுந்தால் வரும் ஒலி, நம் செவிப்பறையில் பட்ட பின்பே ஒலியாக உருவாகிறது. அது வரை அது Electromagnetic Signal ஆக மட்டுமே இருக்க முடியும். ஒலி உருவாவது மூளையில் மட்டுமே. சூட்சமம் ஆகவே நம் மூளையில் மட்டுமே உள்ளது. வெளியில் இல்லை. இத்தத்துவம் டேப் ரெக்கார்டருக்கும் பொருந்தும்.

நம் மூளை வடிவமைப்பதாலேய நிறம், ஓளி, ஒலி, அளவு உருவாகிறதே அன்றி வெளியில் அவை அவ்வடிவில் நிச்சயமாக இல்லை. இதன் காரணமாகவே இதே Algorithm அடிப்படையிலேயே கனவும் உருவாக்கப்படுகிறது.

அனைத்து பொருள்களுமே வெற்றிடத்திலேயே உள்ளது. எல்லா பொருள்களுமே மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் வெற்றிடமாகவே உள்ளது. Space contains all Matter. All Matters contains Space only.

ஒரு கிராமபோன் ரெகார்டில் அல்லது கம்ப்யூட்டர் Hard Disk கில் பாடல் அல்லது படம் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் தான் பிரபஞ்சம் Atom + Space வடிவில் உள்ளது. நம் மூளையே அதை சூட்சமமாக வடிவமாக சிருஷ்டிக்கிறது.

எப்படி ஒரு நாயால் கருப்பு வெள்ளை நிறங்களை தவிர மற்ற நிறங்களை பார்க்க முடியாதோ அதேபோல் நம்மால் உணரமுடியாத Parameters எவ்வளவோ இருக்கலாம்.

நாம் காணும் அனைத்துமே நம் மூளையினால் உருவாக்கப்படும் Simulation மட்டுமே. இதில் நம் உடலும் சேர்த்து அடங்கும்.

ஒரு கோணத்தில் பார்த்தால் நாம் காணும் அனைத்துமே தொட்டு உணரக்கொடிய கனவு (Tangible Dream) என்றால் அது உண்மையே. ஆகவே பிறப்பும், இறப்பும் ஒரு கனவே. நாம் உண்மையில் என்றும் அழியாத Consciousness எனப்படும் இறை உணர்வே..

இதன்  காரணமாகவே ஜகம் எனப்படும் இந்த பிரபஞ்சமே மாய பிம்பமாக கருதப்படுகிறது. அப்போது என்றுமே மாறாதது என்ன? அழிவற்றது என்ன? அதுவே பிரபஞ்ச பேருண்மை. அதுவே இறைவன்.

4. இறைவனுக்கும், நமக்கும், உண்மைக்கும் உள்ள தொடர்பு யாது?

மாறக்கூடிய அனைத்திற்கும் அடிப்படையாக மாறாத இருப்பு ஒன்று உள்ளது. அனைத்திற்கும் இதுவே அடிப்படை. இதுவே Consciousness எனப்படும்  உணர்வுநிலை. இந்த உணர்வுநிலை இந்த பிரபஞ்த்தையே உருவாக்கி தன்னுள் இயக்கம் பேராற்றல் பெற்றது. இறைவன் Consciousness  எனப்படும் பிரபஞ்ச பேருண்ர்வாகவும,  கல், மண், முதலிய  மூலபொருள்களில் மயங்கிய நிலையிலும், தாவரங்களில் கனவு நிலையிலும், விலங்கினங்களில் மந்த நிலையிலும், மனிதனில் சற்றே விழித்த நிலையிலும் உள்ளது. ஆற்றல் வெவ்வேறாக இருப்பினும் அனைத்தும் ஒன்றின் மூலகூறே. அனைத்தும் இறைவனின் வெளிப்பாடே. எல்லாம் ஒன்றே.

5.  இறைவனும் நாமும் ஒன்று என்றால் அதை நம்மால் உணர இயலாத காரணம் என்ன?

மனிதன் உடல், மனம், ஆன்மா (Body, Mind and Soul) என்பதின் கூட்டு பொருளே. இவற்றில் நாம் உடல், மனம், இவற்றிலே சதா சர்வகாலமும் உழன்று மாய்ந்து போகிறோம். நமது  99.99% செயல்பாடுகள் உடல், மனம்  சார்ந்தே உள்ளது.  ஆன்மாவின் உணர்வோ, அதை உணர வேண்டும் என்ற  ஆக்ஞ்சை இருந்தால் மட்டுமே இறைவனை நாம் உணர முடியும்.  ஆன்மா பற்றிய அதீத விழிப்புணர்வும், மட்டற்ற ஆர்வமுமே இறைவனை உணர வழிவகை செய்யும். இவ்வுணர்வு   சொல்லி வராது. இது சுயமாக வரவேண்டும். இறைவனின் அருளே இந்த ஆர்வத்திக்கு அடிப்படை தேவை.

6. இறைவனை உணர்வதில் பூஜை, சாஸ்த்ர சம்பிரதாயங்கள்  இவற்றின் பங்கு என்ன?

இறைவனை உணர ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வழிகளை பின்பற்றுகிறார்கள். உபதேச சாரம் பாடல் -4 ல் ரமண மகரிஷி பூஜை, ஜபம், தியானம் இவற்றில் முன் வருவதைவிட பின்வருவது  மேலும்  சிறந்தது என்று கூறுகிறார். ஒவ்வொருவரும்   தம்மால் இயன்ற வழிகளை பின்பற்றுவது இயற்கையே. இதில் குறை ஏதும் இல்லை.

7. இறைவனை உணர்வது என்றால் என்ன?

தன்னை உணர்தல்  (Self Realization) என்பதே இறைவனுடன் கலப்பதாக பெரும்பாலான ஆன்மீகவாதிகளால் கூறப்பட்டுள்ளது. தன்னை உணர்தல் என்பது மனம் அடங்கப்பெற்று நாமும், இறைவனும், பிரபஞ்சமும், அனைத்து உயிரினங்களும்  ஒன்றே என்ற உணர்வு நிலையில் ( Unity consciousness )  இருப்பதாகும். இது சத் - சித் - ஆனந்த் எனப்படும் Existence- Consciousness-Bliss நிலை. இது மிகப்பெரிய உன்னதமான உண்மை நிலை. சாவிகல்ப,  நிர்விகல்ப, மற்றும்  சஹஜ சமாதி நிலைகள் இதன் இறுதி நிலைகள்.   இவற்றில் முன் வரும் சமாதி நிலைகளைவிட பின்வருவது  நிலைபெற்றது. .

8. வீடுபேறு (liberation) என்றால் என்ன?
 
பிறப்பு, இறப்பு என்னும் நிலைகளை கடந்த முக்தி நிலையே வீடுபேறு நிலையாகும்.  சம்ஸ்காரங்களும், வாசனைகளும் இருக்கும் வரை நமது பிறப்பு, இறப்பு எனும் சுழற்சி வட்டம் நம்மை  தொடர்ந்துகொண்டே இருக்கும். சஹஜ சமாதி நிலை பெற்று சம்ஸ்காரங்களும், வாசனைகளும் நீங்கப்பெற்றாலே வீடுபேறு எனும் முக்தி நிலையை அடைய இயலும்.

9. பிறப்பு  இறப்பு  இவற்றை கடந்த நிலை  (Liberation) அடைவது எவ்வாறு ?

வீடுபேறு அடைவது பிறப்பு  இறப்பு  இவற்றை கடந்த நிலையாகும்.  தன்னை உணர்தல், சமாதி நிலை இவைகளை அடைவதே மிக உன்னத  நிலைகள். இவற்றிற்கும் மேல் வீடுபேறு அடைவது  என்னும் நிலை. இறைவனின் விருப்பபடியே  வீடுபேறு அடைவது  ஏதுவாகிறது.  ஒருவரால் வீடுபேறு அடைய முயற்சி  மட்டுமே செய்ய இயலும். இறைவனின் விருப்பபடியே  வீடுபேறு அடைவது ஏதுவாகிறது


10. மனிதர்களாகிய நாம் செய்யவேண்டியதுதான் என்ன?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்  ஏதோ ஒருவிதத்தில் நாம்  யார் என்று உணர இட்டு செல்லும் மார்க்கமே. நம்முடைய கர்மாவும் இதை ஒட்டியே அமைகிறது. கர்மா நமக்கு போதிக்கும் ஆசிரியர் போன்றது.  ஆகவே கர்மாவை கண்டு அஞ்சத்  தேவையில்லை. ஒவ்வொருவரின்  ஆன்மாவும்  தன்னை உணர பல்வேறு செயல்கள் மூலமாக வழிவகுத்துக்கொள்கிறது. ஒரு சிலர் இந்த விதத்தில் பரிணாமவளச்சியில் முன்னேறியும், ஒரு சிலர் பின் தங்கியும் உள்ளனர். ஆக மொத்தத்தில் அனைத்துமே இந்த பிரபஞ்சத்தில் முன்னேறிய படியேதான் உள்ளது. எனவே  இறைவனிடம் நம்மை  நிபந்தனையற்ற சமர்ப்பணம் (Unconditional Surrender) செய்வதே அனைத்திலும் சிறந்தது.

 

HOME